Sunday, March 7, 2010

மனைவியின் கர்ப்பம் [Wife's Pregnancy]

சிறுகதை [A short story]

சிறு பிள்ளையின் மனதை விட மறுக்கும் அந்த இளைஞ்சன் கார்த்திக்.
[Karthik, a young man, still not ready to shed his boyish behaviour.]

அன்று அவன் மனம் இனம் புரியாத நெகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது.
[That day, he was unusually elated.]

நிலவு போல் பால் வடியும் தன் மனைவியின் முகத்தை பார்த்தான்.
[He looked at his wife whose face shone like a full moon.]

அவளின் கண்கள் கார்த்திக்கை நோக்கின. "நீதான் என் உலகம்...." என்றன.
[Her eyes set upon karthik; her look said "You are my world....".]

கார்த்திக், இப்பிறப்பில் அவன் கொண்டு வந்திருந்த அத்தனை அன்பையும், தன் மனைவிக்கே கொடுத்திருந்தான்.
[Karthik has showered the whole of his love from his entire life, on his wife.]

அது அவளுக்கு தெரியும். அவர்கள் இருவரும் ஒன்றுக்குள் ஒன்று.
[She knows it. They blended with each other.]

அவன் அவளின் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டான்.
[He took her hands in his own.]

அவளின் மெலிந்த விரல்களை வருடி, தன் இதழ் பதித்தான்.
[He gently kissed her long soft fingers.]

அவளை மெதுவாக அழைத்துச்சென்று, மெத்தையில் அமர்த்தினான்.
[He slowly guided her, and made her sit on the bed.]

அவள் 9 மாத கர்ப்பிணி. தன் தாய் வீட்டிலிருந்தாள்.
[She is in 9 month of her pregnancy. She is at her father's.]

அவன் ஊரிலிருந்து, அவளை பார்க்க வந்திருந்தான். வீட்டில் யாருமில்லை தற்போது.
[He has come to visit her. No one at home now, except themselves.]

அழகான தன் மனைவியின் வயிறு, அளவுக்கு மீறி வளர்ந்திருந்தது.
[Her belly has grown a lot.]

பூசணிக்காய் கோபப்பட்டு, பெரிதாகிவிட்டது போல.
[It's like a water melon vengefully grown out of bounds.]

கார்த்திக், அவள் அருகில் அமர்ந்து அவள் வயிற்றைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான்.
[Karthik sat close to her and touched her big belly.]

அவள் கணிவோடு அவனைப்பார்த்தாள்.
[She looked at him fondly.]

அவன் லேசாக புன்னகைத்துவிட்டு, அவள் வயிற்றில் தன் காதை வைத்து உள்ளிருக்கும் தன் மகனின் ஓசையை கேட்டான்.
[He smiled shyly and placed his ears on her belly and listened to the sounds of his son inside.]

"இன்னும் ஒரு மாதம் பொறுத்துக்கொள் செல்லம். உனக்காக நான் செய்த பரிசை கொடுத்துவிடுகிறேன்" கிசுகிசுத்தாள் அவள் அவன் காதில்.
[She spoke in his ears, "Wait for another month darling, I will give you the present I made for you."]

"பிறகு, நீ என்ன தருவாய் எனக்கு?" என்றாள் அவள்.
["What will you give me in return?" she said.]

நான் உனக்கு..... இன்னொன்று தருகிறேன், என்றான் சிரித்துக்கொண்டே....
["I will give you....... another one?" He said with a little laugh.]

"அடப்பாவி......!" என்றாள் பொய்க்கோபமும், வெட்கமும் பிடுங்கி திண்ண.....
["You....!" she faked an anger shy-fully.]

கார்த்திக் தன் போர்வைக்குள் சிரித்துக்கொண்டான். இன்னும் எழ மனமில்லாமல், தனக்கு வரப்போகும் மனைவியைப் பற்றி கனவு காண, மீண்டும் புரண்டு படுத்தான்.
[Karthik shifted in his blankets. Still not ready to get up, he turned to other side to continue dreaming about his future wife.]

6 comments:

  1. Variable has been initialized with the default value :)

    ReplyDelete
  2. superuuu.... ware wah .. .nalla iruku......

    ReplyDelete
  3. @Sathyan:

    Nandri.... adhavadhu, thank you.... :)

    ReplyDelete
  4. Karthick nee thana? eppa wedding? Nalla Blog.

    Padikum pothu, TV la Christian Matha bothagar persura feel irthunchu.(English+Tamil) :)

    ReplyDelete